இனி 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 11, 2024

Comments:0

இனி 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை!

இனி 2 ஆண்டுகள் பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை!

கல்வி நிறுவனங்களில் வருகின்றப் கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்புகளுக்கு அனுமதி இல்லை என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்

தெரிவித்துள்ளது.

தற்போது கல்வி நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் பி.எட் படிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.

மேலும், சில கல்வி நிறுவனங்களில் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் பட்டப்படிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளன.

அதன்படி படிக்கும் மாணவர்கள் பி.எஸ்.சி. அல்லது பி.ஏ. படிப்புடன் பி.எட் படிப்பையும் மேற்கொள்வார்கள். இந்த நிலையில், 2024-25 கல்வியாண்டு முதல் 2 ஆண்டுகள் பி.எட் படிப்பை நடத்த கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதற்கு பதிலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் 4 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.எட் படிப்பை மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டு B.Ed படிப்புகளுக்கு அனுமதி கிடையாது.!

புதிய தேசிய கல்வி 2020ன்படி, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம் செய்வதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்த நிலையில் வரும் கல்வியாண்டு முதல் 2 ஆண்டு B.Ed படிப்பு நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாது. 4 ஆண்டு ஒருங்கிணைந்த B.Ed படிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்- தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்..!

இனி B.ed படிப்பு 4 வருடங்களாகிறது

இதன்படி இனி B.ed 4 வருடங்களாகிறது.

In order to upgrade the competency of teachers , the National Council for Teacher Education ( NCTE ) has launched the Integrated Teacher Education Programme ( ITEP ) under the New Education Policy ( NEP ) 2020 in which the duration of B.Ed. programme has been increased from two years to four years and discontinued giving approval of two years B.Ed. programme from the academic session 2023-24

This Council has decided not to grant new approvals to any institutions for running two year B.Ed. ( Special Education ) programme ( s ) from the academic session 2024-25 . The Council is in the process of developing a new training programme on the pattern of NCTE soon , as per NEP 2020 All the institutions / colleges / universities who desire to run the . Integrated B.Ed. Special Education of 4 year duration ( in line of the Integrated Teacher Education Programme - ITEP of NCTE ) may apply afresh for the next academic session once the online portal is opened

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews