10ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 14, 2023

Comments:0

10ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கு விடைத்தாள் மறுமதிப்பீடு வழங்கும் புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பொது தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது

மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதினால், விடைத்தாளில் மதிப்பெண் மறுகூட்டல் செய்ய

விண்ணப்பிக்கலாம்.அதில், திருப்தி இல்லை என்றால், மதிப்பிடப்பட்ட தங்களது விடைத்தாள் நகலை பெற்று, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த மறுமதிப்பீடு முறை, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. 10ம் வகுப்பு மாணவர்கள், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எனவே 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில், ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, விடைத்தாள் நகல் பெறவும், மறுமதிப்பீடு செய்யவும் சிறப்பு அனுமதி பெற்று வந்தனர்.


இந்நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களும், இனி விடைத்தாள் நகலை பெற்று, மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம் என, பள்ளிக்கல்வி துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.

இந்த அரசாணையின்படி, வரும் மார்ச்சில் துவங்க உள்ள பொது தேர்வில் பங்கேற்கும், 10ம் வகுப்பு மாணவர்கள் இந்த சலுகை வாயிலாக பயன் பெறலாம்.

ஒரு பாடத்துக்கான, விடைத்தாளின் ஒளி நகல் பெற, 275 ரூபாய், மறுமதிப்பீடுக்கு, 505; மறுகூட்டல் செய்ய, 205 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews