எட்டாவது சம்பள கமிஷன் எப்போது அமைக்கப்படும்? - மத்திய நிதித்துறை செயலர் பதில் When will the eighth pay commission be set up? - Union Finance Secretary Answer
''அடுத்தாண்டு நடக்கவுள்ள பார்லி., தேர்தலுக்கு முன்பாக, எட்டாவது சம்பள கமிஷன் அமைக்கும் எந்த திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை,'' என்று மத்திய நிதித்துறை செயலர் டி.வி., சோமநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த காலங்களில் மத்தியில் ஆளும் அரசுகள், சம்பள கமிஷன் அமைப்பது தொடர்பான அறிக்கையை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிட்டுள்ளன.
மத்திய அரசு பணியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது ஓட்டுகளை பெறும் நோக்கில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 54 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். எனினும், சம்பள கமிஷன் அமைப்பது போன்ற திட்டம் எதுவும் அரசிடம் நிலுவையில் இல்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.