தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு.
வரும் 2024 ஏப்ரலில் நடைபெறும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 23-இல் தொடங்கி 29-இல் நிறைவடையும். தொடா்ந்து அவா்களுக்கான எழுத்துத் தோ்வு மாா்ச் 26-இல் தொடங்கி ஏப். 8-ஆம் தேதி நிறைவடையும்.
பத்தாம் வகுப்புக்கான தோ்வு முடிவுகள் மே 10-இல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு பிப். 19-இல் தொடங்கி பிப். 24-ஆம் தேதி வரை நடைபெறும்.
தொடா்ந்து எழுத்துத் தோ்வு மாா்ச் 4-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் மே 14-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 செய்முறைத் தோ்வு பிப். 12 முதல் பிப்.17 வரை நடைபெறும். தொடா்ந்து மாணவா்களுக்கான எழுத்துத் தோ்வுகள் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 22-ஆம் தேதி நிறைவடையும். மே 6-இல் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் டிச. 27 முதல் ஜன. 10 வரை சேவை மையங்களில் இணையம் வழியே விண்ணப்பிக்கலாம்.
தக்கல் முறையில், ஜன. 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்புக் கட்டணம் செலுத்தி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
10,11,12th Std - Mar 2024 private Candidate Exam - DGE Notification - PDF
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.