17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்: போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: பயனர்களுக்கு எச்சரிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 08, 2023

Comments:0

17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்: போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: பயனர்களுக்கு எச்சரிக்கை.



17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்: போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு: பயனர்களுக்கு எச்சரிக்கை.

பயனர்களின் போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் 'ஆப்'களை பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.

கூகுள் பிளேஸ்டோரில் பல்லாயிரக்கணக்கான ஆப்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், விதிகளை மீறும் ஆப்கள் மற்றும் சட்டவிரோதமான ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்குவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் தற்போது 17 ஆப்களை கூகுள், தனது பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. இந்த ஆப்கள் அனைத்தும் பயனர்களுக்கு கடன் வழங்குவதாகும். மொத்தம் 18 கடன் ஆப்கள் குறித்து கூகுள் நிறுவனத்திற்கு புகார் வந்துள்ளது.

அதில் 17 ஆப்கள் பயனர்களுக்கு கடன் வழங்குவதுடன், போனில் உள்ள தகவல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை உளவு பார்த்தது தெரியவந்தது.

உளவு பார்த்து சேகரித்து வைத்திருக்கும் தகவல்களை வைத்துக்கொண்டு பயனர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக இந்த ஆப்கள் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, வடகிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களை குறிவைத்து மிரட்டுகிறது. இதனையடுத்து 17 ஆப்களையும் பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

மேலும், பயனர்களும் இந்த 17 ஆப்களை தங்கள் போனில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. நீக்கப்பட்ட ஆப்கள்:

1. AA Kredit
2. Amor Cash
3. GuayabaCash
4. EasyCredit
5. Cashwow
6. CrediBus
7. FlashLoan
8. PréstamosCrédito
9. Préstamos De Crédito-YumiCash
10. Go Crédito
11. Instantáneo Préstamo
12. Cartera grande
13. Rápido Crédito
14. Finupp Lending
15. 4S Cash
16. TrueNaira
17. EasyCash

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews