எழுதுங்கள் டோபல் தேர்வு Educational Testing Service
முக்கியத்துவம் சர்வதேச அளவில், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் 12 ஆயிரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் டோபல் தேர்வை அங்கீகரித்துள்ளன.
குறிப்பாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் டோபல் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
கடந்த 1964ம் ஆண்டிலில் துவக்கப்பட்ட இத்தேர்வை, ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டிராத நாடுகளைச் சேர்ந்த, 3.5 கோடி பேர் இதுவரை எழுதி உள்ளனர். இத்தேர்வில், வாசித்தல், கேட்டல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்பட்டு, உரிய மதிப்பெண் வழங்கப்படுகிறது.
தேர்வு முறை:
டோபல் இன்டர்நெட் பேஸ்டு டெஸ்ட் -ஐ.பி.டி., தேர்வை, அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையத்திலும் கம்ப்யூட்டர் வாயிலாக எழுதலாம் அல்லது வீட்டில் இருந்தபடியேவும் கம்ப்யூட்டர் வாயிலாக எழுதலாம்.
பேப்பர் எடிஷன் முறையில் தேர்வு மையத்தில் காகித அடிப்படையில் எழுதலாம்.
பேசுதல் தேர்வை மட்டும் வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டர் வாயிலாக அணுகலாம்.
தேர்வு நேரம்:
கம்ப்யூட்டர் வாயிலான தேர்வில், வாசித்தல் பகுதியில் 20 கேள்விகளுக்கு 35 நிமிடங்கள், கேட்டல் பகுதியில் 28 கேளிவிகளுக்கு 36 நிமிடங்கள், பேசுதல் பகுதியில் 4 செயல் பயிற்சிகளுக்கு 16 நிமிடங்கள் மற்றும் எழுதுதல் பகுதியில் 2 செயல் பயிற்சிகளுக்கு 29 நிமிடங்கள் என்ற முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு பகுதியிக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கேள்விகளுக்கு பதில் அளிக்கும்பட்சத்தில் அடுத்த பகுதிக்கு உடனே செல்லலாம்.
காகிதம் அடிப்படையிலான தேர்வுக்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.
தேர்வுக்கு தயாராதல்:
இத்தேர்வை திறம்பட அணுக உரிய பயிற்சி மேற்கொள்ளுதல் அவசியம்.
அதற்கான வழிமுறைகள், பாடத்திட்டங்கள், பயிற்சிக்கான வழிகாட்டுதல்கள், மாதிரி வினாக்கள் ஆகியவற்றைக்கொண்டு இணையதளம் வாயிலாகவே பயிற்சி மேற்கொள்ளலாம்.
தேர்வுக்கான விண்ணப்பப் பதிவும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது.
விபரங்களுக்கு:
www.ets.org
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.