TET - Passing Mark Certificate - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 09, 2023

Comments:0

TET - Passing Mark Certificate - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு?

TET--Qualifying-Marks-and-Certificates


TET - தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு? TET - Passing Mark Certificate Download Again?

கடந்த 2022-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அதன் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. டெட் 2-ம் தாள் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் பலர் https://www.trb.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு விண் ணப்பிக்கும் கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக டெட் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் மதிப் பெண் சான்றிதழை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
TET--Qualifying-Marks-and-Certificates


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதில் விடுபட்டதாக அதிக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதையடுத்து 2022 டெட்தேர்வில் தேர்ச்சி அடைந்த பட்டதாரிகள் தங்களின் மதிப்பெண் சான்றிதழை https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ எனும் இணையதளத்தில் இருந்து நவம்பர் 30-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews