6-12 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தோ்வு அட்டவணை வெளியீடு Publication of half yearly timetable for classes 6-12
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத் தோ்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
6 முதல் பிளஸ்2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வு நிகழ் கல்வியாண்டு முதல் மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அரையாண்டுத் தோ்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்விவரம்: 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத் தோ்வுகள் டிசம்பா் 11 முதல் 21-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளன.
அதேபோல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தோ்வுகள் டிசம்பா் 7 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதியம் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வுகள் நடத்தப்படும். தோ்வுக்கு முந்தைய நாளில் அதற்கான வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியா்கள் எமிஸ் தளம் வழியாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம்.
வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதும் பிரச்னை இருந்தால் 14417 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அதை பதிவு செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அரையாண்டுத் தோ்வுகள் முடிந்த பிறகு டிச. 23 முதல் ஜன. 1 வரை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்படவுள்ளதாகவும், மறுபுறம் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் முழுவதையும் டிசம்பா் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
CLICK HERE TO DOWNLOAD அரையாண்டுத் தோ்வு அட்டவணை - PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.