மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 23, 2023

Comments:0

மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை

How to make school holidays during rainy season?: Advice for collectors - மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை

மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு 7 கட்டுப்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி

விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:

தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ, போக்குவரத்து பாதிக்கப்பட்டோலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.

மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.

மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews