The Disciplinary Committee will look into the following functions: To assist the students in conforming to school rules and regulations. To help students develop self-discipline. To administer consequence, commensurate with offence committed by any student - பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு Disciplinary Action Committee in Schools
உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள, ஒவ்வொரு பள்ளி அளவில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாட்டை கண்காணிக்க, தலைமை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் இணைந்த குழு அமைக்க வேண்டும். சீருடையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை இக்குழுவினர், உறுதி செய்ய வேண்டும்.பாடவேளையில் வகுப்புகளை புறக்கணித்து, மாணவர்கள் வெளியே செல்கின்றனரா, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளியின் பிற பகுதியில் நடமாடுகிறார்களா என்பதை கண்காணித்து, அவர்களை வகுப்புகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சில நேரங்களில் பொதுமக்கள், பெற்றோர் இணைந்து பள்ளிக்கு அவப்பெயர் மற்றும் குந்தகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. அத்தகைய சூழலில் தலைமை ஆசிரியர்கள், பிற ஆசிரியர்கள் உடனடியாக குழுவினருடன் கலந்து ஆலோசித்து, சுமூகமாக கையாண்டு தீர்வு காண வேண்டும். மாணவர்களின் ஒழுக்கமே முக்கியம்; அதுவே குழுவின் நோக்கம் என்பதை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும்.இது தொடர்பாக விரிவான சுற்றறிக்கையை, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது.
அதனை பின்பற்றி, மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.