தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை...பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்! - நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 18, 2023

Comments:0

தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை...பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்! - நவம்பர் 30-ம் தேதி கடைசி நாள்

Tamil Nadu Government Monthly Scholarship...From 10th Class to Graduates can apply! - தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகை...பத்தாம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம்!

10-ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தமிழக அரசு தரும் உதவித் தொகை பெறுவதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம்.

இந்த தொகையைப் பெறுவதற்கு பொதுப்பிரிவு இளைஞர்களுக்கு தங்கள் கல்வித்தகுதியைப் பதிவு செய்து 5 வருடங்களும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வருடமும் போதுமானது. உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவி தொகை பெற தகுதியுள்ள விருப்பமுள்ள பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதள முகவரியான https://tnvelaivaaippu.gov.in அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதளத்திலோ உதவித்தொகை விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோரின் கையொப்பம், முத்திரையினை பெற்று படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை நவம்பர் 30-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் பூர்த்தி செய்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews