பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 16, 2023

Comments:0

பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு

பிளஸ் 1 தமிழ் திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை, அக். 15: தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத்தேர் வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர்.

அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபி எஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப் பட்டு வருகிறது.

இந்தத் தேர்வில் சிறப்பிடம் பெறும் 1,500 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக் கத் தொகை வழங்கப்படும். தமிழக தேர்வுத் துறை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு மொத்தம் 2,36,910 மாணவ, மாணவிகள் விண்ணப் பித்தனர். அவர்களில் 2,20,880 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 16,030 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

இந்த முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் நவம்ப ரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMG_20231016_110959

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews