வானில் அதிசயம்... மிஸ் பண்ணாதீங்க... ஒரே மாதத்தில் இரண்டு தரிசனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 11, 2023

Comments:0

வானில் அதிசயம்... மிஸ் பண்ணாதீங்க... ஒரே மாதத்தில் இரண்டு தரிசனம்!

வானில் அதிசயம்... மிஸ் பண்ணாதீங்க... ஒரே மாதத்தில் இரண்டு தரிசனம்! Miracle in the sky... don't miss it... two darshan in one month!

ஆன்மிகம் முதல் வானிலை ஆய்வு வரை, அக்டோபர் 2023 மாதம் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என இரட்டை ஆச்சரியங்களோடு காத்திருக்கிறது.

ஒரே மாதத்தில், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் மிகவும் அரிதாகவே நிகழும். அந்த வகையில் நடப்பு அக்டோபர் மாதம் சிறப்பு பெற்றுள்ளது. அக்டோபர் 14 அன்று சூரிய கிரகணமும், அக்டோபர் 28 - 29 நாட்களில் சந்திர கிரகணமும் அரங்கேறுகிறது.

சூரியன் - பூமி இடையே சந்திரன் தோன்றுவதால் நிகழும் சூரிய கிரகணம், அக்டோபர் 14, சனிக்கிழமை அன்று நிகழ இருக்கிறது. சூரியனை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மறைப்பதால், பூமியில் இருப்பவர்களுக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இந்த நாளில் மறைந்து காட்சியளிக்கக்கூடும். சந்திரனின் விளிம்புகளில் சூரியனை பிரகாசிக்கச் செய்யும் வளைய கிரகணமும் சில தருணங்களில் நிகழ்வதுண்டு.


சூரியன் சந்திரன் இடையே பூமி தோன்றும்போது, பூமியில் உள்ளவர்களுக்கு சந்திரன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைந்து காட்சியளிக்கும் சந்திர கிரகணம் அக்டோபர் 28, சனியன்று தொடங்கி அடுத்த நாள் முடிவடைகிறது. அதிகபட்ச சந்திர கிரகணம் அதிகாலை 1.45 மணிக்கு நிகழும்.

அக்.14 சூரிய கிரகணத்தை இந்தியாவில் உள்ளவர்களால் தரிசிக்க முடியாது. உலகின் இதர பகுதிகளில் பார்வைக்கு சிக்கும் இந்த வானியல் அதிசயத்தை, தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு அல்லது ஆன்லைன் வாயிலாக காணலாம். அக்.29 அதிகாலை சந்திர கிரகணத்தை இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் எளிதில் காண இயலும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews