உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு மீண்டும் ஊக்க ஊதிய உயர்வு! Incentive salary hike for teachers who have completed higher education!
உயர்கல்வி முடித்த ஆசிரியருக்கு ஊக்க ஊதிய உயர்வு: மீண்டும் வழங்க மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்
'உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும்' என, செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. மாநில துணை தலைவர் அத்தியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முத்து வரதப்பன் வரவேற்றார். மாநில சட்ட ஆலோசகர்
சக்திவேல் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் தியாகராஜன் கோரிக்கை குறித்து விளக்கினார். நேரடி நியமன முதுகலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் ராமு, துணை பி.டி.ஓ., ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து, பணப்பலனை பெற்றுத்தர வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில், ஒவ்வொரு பாடத்திற்கும், 10 மதிப்பெண்கள் அக மதிப்பீடு மதிப்பெண்களாக வழங்கப்படுவது போல, பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திலும், அனைத்து பாடத்திற்கும் அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஆசிரியர் எண்ணிக்கை உயர்நிலைப்பள்ளிக்கு, -8, மேல்நிலைப்பள்ளிக்கு, -11 என்ற பழைய முறையே தொடர வேண்டும். உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வை, மீண்டும் வழங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சிறந்த ஆசிரியர், மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப் பட்டன

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.