அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 22, 2023

Comments:0

அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் - ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தில் அகவிலைப் படியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

திமுக அரசு பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு முறையும் நிதி நிலையை காரணம் காட்டி எங்களது கோரிக்கைகள் கிடப்பில் போடப்படுகின்றன.

ஊக்க ஊதியம், சரண் விடுப்பு ஒப்படைப்பு, பதவி உயர்வு போன்ற பலன்கள் பறிக்கப்பட்டன. மேலும் மத்திய அரசின் அகவிலைப்படி உயரும் போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டு வந்தது. கரோனா பரவலுக்கு பின்னர் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவித்து, சில மாதங்கள் தாமதமாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. முதல்வர் உறுதியளித்தபடி, தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வை ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது

IMG_20231022_191123

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84640314