11வது நாளாக தொடர் போராட்டம்.. ஆசிரியர்கள் கூண்டோடு கைது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 05, 2023

Comments:0

11வது நாளாக தொடர் போராட்டம்.. ஆசிரியர்கள் கூண்டோடு கைது

11வது நாளாக தொடர் போராட்டம்.. ஆசிரியர்கள் கூண்டோடு கைது

சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் கைது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் மற்றும் அதன் அருகே உள்ள சமூகநலக் கூடங்களில் தங்கவைப்பு.



சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது

சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக குழு அமைத்தல் உட்பட பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட நிலையில், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் சங்கத்தினர் உறுதிபட தெரிவித்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர்கள் ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், புதிய பணி நியமனத்திற்கு தேர்வு நடத்தக்கூடாது என TET தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களும் போராடி வந்தனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 3 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதன்கிழமை 2-வது முறையாக போராட்ட களத்திற்குச் சென்று சந்தித்தார். அத்துடன், தனது ஆதரவை தெரிவித்ததுடன் ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதேபோன்று, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜனும் ஆசிரியர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சருடன் ஆசிரியர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்படும் எனவும், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார். TET தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு, உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து, நிதித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்க கல்வி இயக்குநர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 3 மாதங்களில் அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.அரசின் அறிவிப்புகள் திருப்திகரமாக இல்லை என்று கூறிய ஆசிரியர் சங்கங்கள், தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்தன. மேலும், கோரிக்கைகளை அரசு முழுமையாக நிறைவேற்றும் வரை, போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் ஆசிரியர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

இந்நிலையில், டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 3 சங்கங்களையும் சேர்ந்த ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அவர்களை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் அடைத்தனர்அன்பில் மகேஸ் அறிவிப்புகளை ஏற்க மறுத்து சென்னையில் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்கள் கைது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews