பள்ளிகளில் 10-ஆவது நாளாக கோரிக்கை அட்டை அணிந்து இடைநிலை ஆசிரியா்கள் பணி
அரியலூா் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களுக்குள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பணியாற்றினா். அரியலூா் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களுக்குள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பணியாற்றினா். ஆசிரியா் தகுதித்தோவு மூலம் நியமிக்கப்பட்ட, இடைநிலை ஆசிரியா்கள், சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு, ஆசிரியா் தினமான கடந்த 5 ஆம் தேதி முதல் கோரிக்கை அட்டை அணிந்து, வேலையில் ஈடுபட்டுள்ளனா். அதன்படி அரியலூா் மாவட்டத்தில், அரியலூா், திருமானூா், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூா் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரியும், 350 ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.
10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா். வரும் 27 ஆம் தேதிக்குள் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணாவிட்டால், 28 ஆம் தேதி முதல் பருவத்தோவு விடுமுறை நாள்களில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தவு செய்துள்ளதாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.