புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முடிவெட்டி வரச்சொல்லி வீட்டிற்கு அனுப்பியதால், அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை விஜயபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணையா - மாரிக்கண்ணு தம்பதிக்கு மகரஜோதி என்ற மகளும், மாதேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். மாதேஸ்வரன், புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். மாதேஸ்வரன் அதிகமாக முடி வளர்த்ததால், அவரது தலை முடியை வெட்ட சொல்லி தொடர்ந்து ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மாணவர் முடிவெட்டாமல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் மாதேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், பெற்றோர்கள் அதற்கு உடன்படவில்லை. மாணவன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் எனவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனையடுத்து மாதேஸ்வரனின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அரசு மருத்துவமனை முன்பு மாதேஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சஸ்பெண்ட்
இதனிடையே, மாதேஸ்வரன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் மற்றும் ஆசிரியர் பாரதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.