*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*நாள்:08.09.2023*
****** *11.09.2023 அன்று டிட்டோஜாக் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!*
*போராட்டத்தை வெற்றிகரமாக்க TNPTF தோழர்கள் இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றுக!* *******
*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று (07.09. 2023) இரவு காணொளி வழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் பங்கேற்றார்.*
*இக்கூட்டத்தில் எண்ணும் எழுத்தில் திட்டத்தை மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்வதைக் கைவிடுதல்....*
*மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடுதல்.....*
*EMIS பதிவேற்றம் செய்யும் பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவித்தல்....*
*CRC பயிற்சிகளில் கருத்தாளர்களாக ஆசிரியர்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்தல்.....*
*பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டுதல்....*
*விடுமுறை நாட்களில் பயிற்சிகள் நடத்துவதைக் கைவிடுதல்....*
*ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் 11.09.2023 திங்கள் மாலை மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.* *மேலே குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நம் பேரியக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கடந்த 30.08.2023 அன்று மாநிலம் முழுவதும் வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பு பேரெழுச்சியுடன் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.அநீதியை எதிர்ப்பதில், நீதியை,நியாயத்தை நிலை நாட்டுவதில் எப்போதும் முன்னணிப் படையாக விளங்கும் நம் பேரியக்கத் தோழர்கள் டிட்டோஜாக்கின் செப்டம்பர் 11 ஆர்ப்பாட்டத்திலும் முன்கள வீரர்களாகக் களம் காண வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*மேற்கண்ட ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்குவதற்காக நடத்தப்படும் மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டங்களில் டிட்டோஜாக்கின் இணைப்பு சங்கங்களின் மாவட்டப் பொறுப்பாளர்களோடு இணைந்து செயலாற்றுமாறு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொறுப்பாளர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.* *******
*தோழமையுடன்*
*ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.