தமிழகத்தில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 26, 2023

Comments:0

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!

kamadenu_2023-09_2eea28fd-0da4-4acf-b56b-9b3b96577510_school_leave_1


தமிழகத்தில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு! வெளியானது அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த வாரம் காலாண்டு தேர்வு முடிந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியிருந்தது. இந்நிலையில், 1 முதல் 5-ம் வகுப்புக்கு மாணவர்களுக்கு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
IMG_20230926_081622

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84620775