அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசிய ஆசிரியை - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 29, 2023

Comments:0

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசிய ஆசிரியை - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசிய ஆசிரியை - விளக்கம் கேட்ட தலைமை ஆசிரியையையும் தாக்கியதால் பரபரப்பு

அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசிய வேதியியல் ஆசிரியை

ஏர்வாடி அருகே அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டதால் தலைமை ஆசிரியரை வேதியியல் ஆசிரியை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவதூறு பேச்சு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கண்ணநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜெயசெல்வி வேதியியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளை அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தளபதிசமுத்திரம் கீழுர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவரையும், மாணவியையும் அவதூறாக பேசினார். தலைமை ஆசிரியை மீது தாக்குதல்

இதுகுறித்து மாணவரின் பெற்றோர் தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் புகார் அளித்தனர். உடனே அவர் ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் விளக்கம் கேட்டு நேற்று 'மெமோ' கொடுத்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி, 'மெமோ'வை கிழித்து எறிந்து தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்ததுடன் கையில் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசில் புகார்

இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வியிடம் இருந்த தங்கச்சங்கிலியை மீட்டு தலைமை ஆசிரியை ரத்தின ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

இந்த நிலையில் அந்த பள்ளியில் உள்ள ஆசிரிய-ஆசிரியைகள் அனைவரும் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியாக முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு விசாரணை நடத்தி, பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து எழுத்து மூலமாக பதில் பெற்றார்.

இந்த விசாரணையின்போது குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியை ஸ்டெல்லா ஜெயசெல்வி வரவில்லை. அவரிடமும் விசாரணை நடத்தி விளக்கம் பெற்ற பிறகு பள்ளி கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப உள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தெரிவித்தா

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews