9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் கார்டு இல்லை... பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்த உண்மை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 23, 2023

Comments:0

9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் கார்டு இல்லை... பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பில் தெரிய வந்த உண்மை!

*9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் கார்டு இல்லை... கணக்கெடுப்பில் தெரிய வந்த உண்மை!

அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக இருந்தாலும், அது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் மேற்கு வங்கத்தின் பள்ளிக் கல்வித்துறை ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

அதில், மேல்நிலை தேர்வு எழுத விரும்பும் சுமார் 9 லட்சம் மாணவர்களிடம் ஆதார் அட்டை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஆதார் அட்டை இல்லாததால், இதுபோன்ற மாணவர்கள் மாநில அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை அடிக்கடி இழக்கின்றனர் என்பதை மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், ஆதார் அட்டை சேர்க்கைக்காக மாநிலம் முழுவதும் 275 தற்காலிக முகாம் அலுவலகங்களை அமைத்து இந்தப் பிரச்னையைச் சமாளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் இதுபோன்ற பதிவு முகாம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த வித கட்டணமும் இன்றி மாணவர்கள் தங்கள் பெயர்களை அங்கு பதிவு செய்து கொள்ளலாம்.

முதன்மை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என அனைத்து நிலை மாணவர்களும் தங்கள் பெயர்களை பதிவு செய்ய முடியும். இந்த நடைமுறை புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும் இந்த வசதிகள் விரிவுபடுத்தப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews