தமிழகம் முழுவதும் சிதிலமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை அரசுஉடனடியாக கட்டித் தர வேண்டும்என்று பாஜக தலைவர் அண்ணா மலை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பண்ருட்டி சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையல் கூடத்தின்மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் பெண் சத்துணவு அமைப்பாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சிதிலமடைந்துள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டப்போவதாக அறிவித்த திமுக, அதன்பிறகு அதுகுறித்து பேசுவதே இல்லை. பெரும் விபத்து ஏற்பட்டால்தான் தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா? தேவையற்ற விளம்பர செலவினங்களை விடுத்து, மாணவர்களுக்கு பயன்படும் பள்ளி கட்டிடங்களை உடனே கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.