பள்ளி பூட்டின் மீது மனிதக் கழிவை பூசியதை ஒப்புக் கொண்ட மாணவர்
திருத்தணி, ஆக. 20: மத்தூர் அரசுப் பள்ளி வகுப்பறை பூட்டின் மீது மனி தக் கழிவை பூசியதை, அந்தப் பள்ளி மாணவர் ஒப்புக் கொண்டதைய டுத்து, அவரிடம் போலீசார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினர்.
திருத்தணி ஒன்றியம், மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வாயில் கதவு மற்றும் பூட்டின் மீது மர்ம நபர்கள், மனிதக் கழிவைப் பூசிவிட் டுச் சென்றதாக பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் சத்யா திருத்தணி போலீஸில் அண்மையில் புகார் அளித்தார். ஆசிரியர்களும், மாணவர்க ளும் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, போலீஸார் மத்தூர் கிராமத்தில் தீவிர விசாரணை மேற் கொண்டனர். இந்த நிலையில், மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த, அதே பள்ளி யில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளி வகுப்பறை பூட்டின் மீது மனிதக் கழிவு பூசியதை ஒப்புக் கொண்டார். போலீஸாரிடம் அந்த மாணவர் கூறியது: பள்ளியில் எந்த பிரச்னை நடந் தாலும்,ஆசிரியர்கள் என் மீது பழிபோட்டு அசிங்கப்படுத்துகின்றனர். இத னால், ஆத்திரமடைந்த நான் பள்ளியின் கதவு மற்றும் பூட்டின் மீது மனி தக் கழிவைப் பூசி விட்டேன். தெரியாமல் செய்துவிட்டேன். என்னை மன் னித்து விடுங்கள் என்று தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவர் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.