யோகா-இயற்கை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 15, 2023

Comments:0

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை

யோகா-இயற்கை மருத்துவப் படிப்பு: 2,700 போ் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் 2,700-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருப்பதாக இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் அரும்பாக்கத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவ்விரு கல்லூரிகளிலும் 160 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ (பிஎன்ஒய்எஸ்) இடங்கள் உள்ளன. இவை தவிர, 17 தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 993 இளநிலை இடங்களும், நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்களும் உள்ளன. மொத்தமுள்ள 1,710 இளநிலை யோகா-இயற்கை மருத்துவ இடங்களும் ஒவ்வோா் ஆண்டும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

பிளஸ்-2 தோ்வு அடிப்படையில் இந்த மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி தொடங்கியது. மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரபூா்வ இணையதளத்தில் திங்கள்கிழமை (ஆக.14) மாலை 5 மணி வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 1,950-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களும், நிா்வாக இடங்களுக்கு 750-க்கும் அதிகமான விண்ணப்பங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக இந்திய மருத்துவத் துறை தோ்வுக் குழுச் செயலா் மலா்விழி தெரிவித்தாா்.

அவை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு விரைவில் தரவரிசைப் பட்டியலும், கலந்தாய்வு தேதியும் அறிவிக்கப்படும் எனவும் அவா் கூறினாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews