இன்று ஒரே நாளில் இரண்டு வெற்றிகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்தியா
ஒருபுறம் சந்திரயான் 3 நிலவில் இறங்கும் சாதனைக்கான எதிர்பார்ப்பு...
இன்னொருபுறம், சதுரங்க ஆட்டத்தில் நம் சென்னை வீரர் பிரக்ஞானந்தா, நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வென்று உலகக்கோப்பையை கைப்பற்றுவாரா?
2002ஆம் ஆண்டுக்குப்பின் மீண்டும் உலகக்கோப்பை இந்தியாவின் வசமாகுமா என்ற எதிர்பார்ப்பு!
இரண்டுமே எதிர்வரும் ஆட்டத்தை/சூழலை முன்கூட்டியே கணக்கிடக்கூடிய புத்திக்கூர்மைக்கான சவால்களே!
மேக்னஸ் கார்ல்சன், நம் விஸ்வநாதன் ஆனந்தையே தொடர்ச்சியாகத் திணறடித்தவர் என்பதால், அவரோடான இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாகப் பார்க்கப்பட்டது! நேற்றைய முதல் சுற்று விறுவிறுப்பாகச் சென்றது.
மேக்னஸ் கார்ல்சன், வழக்கத்தைவிட கூடுதல் பதட்டத்தோடே காணப்பட்டார். (ஃபுட் பாய்சன் காரணமாக சரியாகச் சாப்பிடவில்லை என்றும் சொல்லப்பட்டது.)
18 வயது பிரக்ஞானந்தா, முதன்முறையாக இறுதியாட்டத்துக்கு வந்ததுபோலவே இல்லாமல், கார்ல்சனைவிட விரைவாகக் காய் நகர்த்தினார். முடிவெடுப்பதிலும் துணிந்தே செயல்பட்டார்.
ஒருகட்டத்தில், தனது ராணியைப் பலிகொடுத்து கார்ல்சனின் ராணியை எடுத்தார். இருவருமே இம்மியளவும் அட்வாண்டேஜ் எடுக்கமுடியாதபடி ஒருவருக்கொருவர் இணையாகவும், நெருக்கடியாகவும் தான் ஆட்டம் சென்றது.
இறுதியில், இருவருக்குமே ஒரு யானை, ஒரு குதிரை, மூன்று சிப்பாய்கள் மீதமிருக்கும் நிலையில், அதுவும் இருவரின் சிப்பாய்களும் நேர்கோட்டில் இருக்கும் சூழலில், 35வது நகர்த்தலில் ட்ரா ஒப்புக்கொள்ளப்பட்டது!
இன்று நடைபெறும் இரண்டாவது/இறுதிச் சுற்றில் வெல்பவர் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவார்.
இன்றைய ஆட்டமும் ட்ரா ஆகும்பட்சத்தில் விரைவு ஆட்டச்சுற்றின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்!
ஏற்கனவே மூன்றாம், இரண்டாம் நிலை வீரர்களை வென்று, இறுதியாட்டத்தை எட்டியுள்ள பிரக்யானந்தா, இன்றைய ஆட்டத்தை வெல்லட்டும்!
மூன்றாவது முயற்சியாக நிலவில் நிலைகொள்ளட்டும் சந்திரயான்!
இரண்டு சாதனைகளுக்கும் முன்கூட்டிய வாழ்த்துகள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.