மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.,கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி
தமிழகத்தில், பதவி உயர்வில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசி ரியர்களுக்கு சமூக நீதி மறுக்கப்படு வதை சீர் செய்யக்கோரியும், பணி விதிகளை நெறிப்படுத்த கோரியும், முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், 75 பேர், நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இது குறித்து, தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக, மாநில சட்ட செயலாளரும், ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசி ரிருமான சீனிவாசன் கூறியதாவது: தமிழகத்தில் மேல்நிலைக்கல்வி துவங்கி, 45 ஆண்டுகளாகியும், அதன் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பணி விதி களில் வழிவகை செய்யவில்லை. எங்களுக்கு கீழ் நிலையில் பணி யாற்றிய ஆசிரியர்கள், எங்களுக்கே அதிகாரியாக வரும் நிலை உள் ளது. தற்போதைய முதன்மைக் கல்வி அலுவலர்களில், 22 பேர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர்கள். பணி விதிகள், நேரடியாக முதுகலை ஆசிரியராக நியமனம் பெறுபவர்களுக்கு பாதிப்பை ஏற் படுத்தும் விதமாக உள்ளது. பல முறை கோரிக்கை விடுத்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால், கருப்பு பட்டை அணிந்து, பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.