மாணவர்களிடையே நேர்மை பண்பை வளர்க்கும் வகையில் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ‘நேர்மையாளர்கள் கடை’ திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் எழுமலையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களிடையே நேர்மை பண்பை வளர்க்கும் வகையில், மாணவர்களுக்காக மாணவர்களே நடத்தும் ‘நேர்மையாளர்கள் கடை’ திறப்பு விழா பொருளியல் மன்றம் சார்பில் நடந்தது. திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் ஜெயகுமார் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜீவரத்தினம் வரவேற்றார். ஆசிரியர் முத்துக்குமார் விழாவின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். சிறப்பு விருந்தினராக கருமாத்தூர் புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சூசை மாணிக்கம், எழுமலை விவேகானந்தா நடுநிலை பள்ளி தாளாளர் சிவானந்தம், மௌலானா மௌலவி ராஜா முஹமது, திருவள்ளுவர் கல்லூரி உறுப்பினர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் கோபி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியைகள் பரமேஸ்வரி, விஜயபிரியா விழாவை தொகுத்து வழங்கினர். முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் மற்றும் பொருளியல் மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். பள்ளி கல்வி இணை இயக்குநர் ஜெயகுமார் பேசுகையில், ‘மாணவர்கள் உண்மை, ஒழுக்கம், நேர்மை போன்ற பண்புகளை வளர்க்க இந்த நேர்மையாளர்கள் கடை உறுதுணையாக இருக்கும். நேர்மை பண்பை மாணவர்கள் வளர்க்கும்போது அவர்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருப்பார்கள்’ என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.