இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 26, 2023

Comments:0

இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை



இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 208 கல்லூரிகளில் 10% மட்டுமே சேர்க்கை

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இடங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

நான்கு வருட படிப்பு குறித்து மணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்ட போதிலும் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையே பெரும்பாலான கல்லூரிகளில் நடந்தன. போதிய கல்வித் தரம் இல்லாததே காரணமாக கூறப்படும் நிலையில் கல்லூரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.பங்கேற்ற 440 கல்லூரிகளில் 208 கல்லூரிகள் 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இரண்டு சுற்று கவுன்சிலிங்கின் முடிவில் 37 கல்லூரிகளை ஒரு மாணவர் கூட தேர்ந்தெடுக்கவில்லை. 176.99 முதல் 142 வரையிலான கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்த 64,286 மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். இதில் 35,474 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தொழில் ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், பங்கேற்ற கல்லூரிகளில் 41 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே நல்ல உள்கட்டமைப்பு, மேம்பட்ட கற்றல் வசதிகள் மற்றும் வலுவான தொழில் தொடர்புகள் ஆகிய வசதிகளை கொண்டுள்ளன.

அதனால் அவ்வாறான கல்லூரிகளில் மட்டும் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ளன, என்றார்.நடைபெற்ற சுற்றுகளில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews