மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் குறித்து கீழ்த்தரமான வகையில் செய்தி வெளியிட்ட சேலம் தினமலருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 31, 2023

Comments:0

மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் குறித்து கீழ்த்தரமான வகையில் செய்தி வெளியிட்ட சேலம் தினமலருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

சென்னை பத்திரிகையாளர் மன்றம் CHENNAI PRESS CLUB

மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டம் குறித்து கீழ்த்தரமான வகையில் செய்தி வெளியிட்ட சேலம் தினமலருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.

இந்தியாவில் பல நிலைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது நம்முடைய தமிழ்நாடு. தமிழ்நாட்டில், பல்லாண்டுகளாக வறுமை காரணமாக மாணவர்களின் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்ற மிக உயர்ந்த நோக்கில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் தொடர்ந்து செம்மையாக செயல்படுத்தப்பட்ட உன்னத திட்டம் மதிய உணவு சத்துணவு திட்டம். இதனால் பலனடைந்தவர்கள் படித்தவர்கள் பலப்பல லட்சம் பேர். மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தின் நீட்சியாக காலை வேளையிலும் மாணவர்கள் பசியாற வேண்டும் என்ற மகத்தான மானுட சிந்தனையின் செயல் திட்டம் காலை உணவு திட்டம் தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி செயல்படுத்தும் நிலையில் இப்படி கொச்சையாக செய்தி வெளியிட்ட தினமலர் சேலம் பதிப்பாளர் மற்றும் இந்த அவலச் செயலுக்கு காரணமானவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தனது தரம் தாழ்ந்த செயலுக்கு மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

அரசின் மீது அரசியல் மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம்.எழுதலாம், பேசலாம் என்பது ஊடகங்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் உரிமை. அதே நேரம் செய்திகளை, விமர்சனங்களை வெளியிடும் அச்சு.காட்சி.டிஜிட்டல் ஊடகங்களின் பொறுப்பு மிக முக்கியமானது.

எவ்வித பொறுப்புமின்றி வக்கிர எண்ணத்துடன் கீழான நோக்கில் இன்றைக்கு காலை உணவு திட்டம் பற்றி அருவருப்பான வகையில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது சேலம் தினமலர், ஊடகங்களின் பொறுப்பை - மதிப்பை படு பாதாளத்தில் தள்ளியுள்ளது இந்த விசமத்தனமான செய்தித் தலைப்பு. ஊடகங்கள்- ஊடகவியலாளர்கள் உரிமைகளை பாதுகாத்திடும் கடமையும் பொறுப்பும் பத்திரிகையாளர் அமைப்புகளுக்கு உண்டு என்கிற நிலையில் நம்முடைய துறையில் இப்படிப்பட்ட மோசமான அவலமான ஒன்று நடக்கும் போது அதை கண்டிக்கின்ற பொறுப்பு கடமை பத்திரிகையாளர் அமைப்புகளுக்கு உண்டு.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு - உலகப் பொதுமறை திருக்குறள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews