What is the procedure of new passport?
Login to the Passport Seva Online Portal with the registered Login Id. Click "Apply for Fresh Passport/Re-issue of Passport" link. Fill in the required details in the form and submit. Click the "Pay and Schedule Appointment" link on the "View Saved/Submitted Applications" screen to schedule an appointment.
How many days before we can apply for new passport?
What should I do? A: You can apply for a re-issue of passport up to 1 year before the expiry and not earlier. However, in case of any change of personal particulars, lost/damaged, Exhaustion of pages you may apply for re-issue of passport.
Which documents are required for passport?
Proof of age (Birth Certificate, School Leaving Certificate, etc.). Proof of address (Aadhaar card, Voter ID card, Electricity bill, etc.). Proof of nationality (Birth Certificate, Voter ID card, etc.). Self-attested copies of the first two and last two pages of your old passport (if any).
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க புது வசதி அறிமுகம்
சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது, பாஸ்போர்ட் சேவை மையங்கள் அல்லது அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் ஆவணங்களின் ஒட்டுமொத்த பரிசீலனை நேரம், தடையற்ற சரிபார்ப்பு ஆகியவற்றை குறைக்க, தேவையான துணை ஆவணங்களை பதிவேற்றுவதற்கான 'டிஜிலாக்கர்' (DigiLocker) செயல்முறையை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் டிஜிலாக்கர் மூலம் பதிவேற்றினால் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையப்பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்பிக்கும் போது, டிஜிலாக்கர் மூலம் 'ஆதார் ஆவணம்' ஏற்கப்படும் வசதியை அமைச்சகம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
முகவரி அல்லது பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்களில் ஒன்றாக 'ஆதார்' சமர்பிக்கப்பட்டால், இணையப்பக்கத்தில் 'டிஜிலாக்கர் பதிவேற்ற' ஆவண செயல்முறையை பூர்த்தி செய்ய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிஜிலாக்கர் மூலம் ஆதார் பதிவேற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவலுக்கு, https://youtu.be/M9xPGDVHib8 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.