ஒரே மாதத்தில் 4 பயிற்சி மாணவர்கள் தற்கொலை: தொடரும் சோகம்!
பிகாரை சேர்ந்த ஐஐடி-ஜேஇஇ மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தானில் கோடாவில், மேலும் ஒரு பயிற்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது கடந்த ஒரு மாதத்தில் நிகழ்ந்த நான்காவது தற்கொலையாகும்.
பிகாரை சேர்ந்தவர் வால்மீகி பிரசாத். கடந்தாண்டு ஐஐடி-ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு கோடாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
மாணவன் மகாவீர் நகர் பகுதியில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தங்கியிருந்த அறையில் தற்கொலைக்கான எந்த குறிப்பும் கிடைக்கவில்லை. போலீஸார் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
கோடா மாவட்டத்தில் 2 ஐஐடி-ஜேஇஇ மாணவர்கள் மற்றும் ஒரு இளநிலை நீட் பயிற்சி மாணவர்கள் உள்பட ஒரே மாதத்தில் நான்கு பயிற்றிச மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 15 பயிற்சி பெறும் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மருத்துவம், பொறியியல் போன்ற நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பதற்காக சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் பல்வேறு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் தற்கொலைக்கு பெரும்பாலும் மனஅழுத்தமே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.