அரசு பள்ளிகளில் 4,062 காலிப் பணியிடங்கள்... லட்சக் கணக்கில் சம்பளம்... உடனே அப்ளை பண்ணுங்க.
www.emrs.tribal.gov.in என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
EMRS Recruitment 2023:
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கையின் மூலம் 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. முக்கியமான நாட்கள்:
விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள்: 2023, ஜுலை 31
விண்ணப்பக் கட்டணம் :
பள்ளி முதல்வர் பதவிக்கு ரூ- 2000/-, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு ரூ Rs. 1500/, ஆசிரியர் அல்லாத இதர அனைத்து பதவிகளுக்கும் Rs. 1000/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலிப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பம் செய்வது எப்படி உள்ளிட்ட விதிமுறைகளை பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (national education for tribal students) வெளியிட்ட அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம் .
விண்ணப்பம் செய்வது எப்படி?
www.emrs.tribal.gov.in என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளி:
பழங்குடியின மாணவர்களுக்காக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குடியிருப்புப் பள்ளிகளை அமைப்பதற்காக இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 275(1)-ன் கீழ் மத்திய அரசு நிதியை வெளியிட்டு வருகிறது.
2018-19ம் ஆண்டு இதற்கென தனித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், 50 சதவீதத்திற்கு மேல் பழங்குடியின மக்கள் தொகை உள்ள வட்டங்களிலும், அல்லது குறைந்தபட்சம் 20 ஆயிரம் பழங்குடியினர் உள்ள ஒவ்வொரு வட்டத்திற்கும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளை அமைக்க கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேற்கூறிய மக்கள் எண்ணிக்கை அடிப்படையில், நாடு முழுவதும் 740 வட்டங்கள் கண்டறியப்பட்டன. தற்போது வரை, நாடு முழுவதும் 394 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 1,05,463 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.