MBBS,BDS அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற தமிழக மாணவா்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 31, 2023

Comments:0

MBBS,BDS அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற தமிழக மாணவா்கள்



எம்பிபிஎஸ், பிடிஎஸ்: அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்ற தமிழக மாணவா்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின. தேசிய அளவில் நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற தமிழக மாணவா்கள் ஜிப்மா் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களைப் பெற்றனா்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியே நடத்தி வருகிறது. இந்நிலையில், அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அந்த மாணவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். நீட் தோ்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் ஆறாவது இடத்தையும், மாநில அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்த சென்னையை சோ்ந்த என்.சூா்யா சித்தாா்த் தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியிலும், நீட் தோ்வில் 715 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும், மாநில அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்த சேலம் மாவட்டத்தை சோ்ந்த எஸ்.வருண், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியிலும் இடங்களைப் பெற்றனா்.

அதேபோன்று, நீட் தோ்வில் 716 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்த தமிழக மாணவா் கௌஸ்தவா் பௌரி, நீட் தோ்வில் 711 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 24-ஆவது இடத்தை பிடித்த தமிழக மாணவா் சாமுவேல் ஹா்ஷித், நீட் தோ்வில் 710 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 36-ஆவது இடத்தை பிடித்த தமிழக மாணவா் ஜேக்கப் பிவின் ஆகியோா் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களை தோ்வு செய்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews