ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? உறுதியான பதிலை அறிவித்த மருத்துவ கவுன்சில் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 03, 2023

Comments:0

ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? உறுதியான பதிலை அறிவித்த மருத்துவ கவுன்சில்



ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு? உறுதியான பதிலை அறிவித்த மருத்துவ கவுன்சில் NEET exam 2 times in a year? The Medical Council announced an affirmative response

அனைத்து எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களும் கவுன்சிலிங்கின் போது நிரப்பப்படுவதால், ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) நடத்துவது சாத்தியமில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் கூறியது.

ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தக் கோரி அகில இந்திய மாணவர் சங்கம் எழுதிய கடிதத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் இவ்வாறு பதிலளித்தது.

மேலும், தேர்வை நடத்துவதற்கு அதிக அளவு பணம் மற்றும் பிற ஆதாரங்கள் தேவைப்படும் என்றும், அதை இரண்டு முறை நடத்துவது அரசாங்க கருவூலத்தில் தேவையற்ற சுமையை ஏற்படுத்தும், என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கூறியது.

இதற்கிடையில், தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் பட்டதாரி மருத்துவக் கல்வி விதிமுறைகள் 2023 இன் கீழ் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை வாபஸ் பெற்றது.

மேலும், திறன் அடிப்படையிலான மருத்துவக் கல்விப் பாடத்திட்ட விதிமுறைகள் 2023, புதிய மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான குறைந்தபட்ச தரநிலைத் தேவைகள்/ MBBS பாடநெறி விதிமுறைகள் 2023 இல் இடங்கள் அதிகரிப்பு மற்றும் மருத்துவக் கல்வி விதிமுறைகளின் தரங்களைப் பராமரித்தல் ஆகியவற்றுக்கான புதிய வழிகாட்டுதல்கள் குறித்து NMC பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளை அழைத்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews