பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 06, 2023

Comments:0

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள் Useful Hotel Management Courses for Plus 2 Completion Students

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான பயனுள்ள பரப்புகள் என்ன படிக்கலாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகள்

லகெங்கும் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போது சுற்றுலா துறையோடு ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. சுவையான, ருசி நிறைந்த உணவுகளை எப்படி சமைக்க வேண்டும். சமைத்த உணவுகளை எப்படி அழகாக,பக்குவமாக பரிமாற வேண்டும் என்பது தொடர்பான ஒரு படிப்பு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு. அடிப்படையில் இது ஒரு தொழில்சார்ந்த படிப்பு. உலக அளவில் 100% வேலை வாய்ப்பு அளிக் கக்கூடிய நுறைகளில் விருந்தோம்பல் துறை முதலிடத்தில் உள்ளது. அத்த கைய விருந்தோம்பல் துறை சார்ந்த படிப்புகள் தான் ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்புகள்,

பொருளாதார வளர்ச்சி, புதிய, புதிய சுற்றுலா தலங்கள் அதிகரித்து வருவது, சுற்றுலா ஆர்வம் றவை காரணமாக ஹோட்டல் துறை யும் நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. எதிர்காலத்தில் இத்துறையில் உலகம் முழுவதிலும் 16 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என மதிப்பி டப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண் டுகளில் இந்தியாவில் சுற்றுலா துறை மிகப்பெரிய வளர்ச்சியை கடந்து ஏராளமான வேலைவாய்ப்புகள் உரு வாகும் என இந்திய பயண மற்றும் சுற்றுலா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டதாரிகளுக்கு எதிர்காலத்தில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் உள்ளது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப் புக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்பு களை படிக்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புகளை படிக்கலாம். படிப்புக்கான செலவு மற் றும் கால அளவைப் பொறுத்து ஒருவர் சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பைத் தேர்வு செய்யலாம். சான் றிதழ் படிப்புகள் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை நடத்தப்படுகின்றன. டிப்ளமோ படிப்புகள் இரண்டு ஆண் டுகளும், பட்டப்படிப்புகள் மூன்று ஆண்டுகளும் நடத்தப்படுகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இளநிலை படிப்பான பி.எஸ்.சி. கேட்ட ரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட், பி.எஸ்.சி. ஹாஸ்பிட்டாலிடி அன்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன், (பி. ஹெச்.எம்.) பி.பி.ஏ. சமையல் கலை போன்ற படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.மூன்று ஆண்டுகால இந்த படிப்பில் உணவு உற்பத்தி உணவு மற்றும் பானத்தொழில்தங்குமிட செயல்பாடுகள் மற்றும் பிற மேலாண்மைகள் போன்றவற்றை இந்த பாடத்திட்டம் உள்ளடக்கியது. இந்த பாடத்திட்டத்தில் அதிகநடை முறை வகுப்புகள், பணியிடப் பயிற் சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை படிப்புக ளான எம்.எஸ்.சி.ஹாஸ்பிட்டாலிட்டி அன்ட் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரே ஷன், எம்.பி.ஏ.ஹாஸ்பிட்டாலிட்டி அன்ட் டூரிஸம் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.பி.ஏ.இன் டூரிஸம், எம்.பி.ஏ.சமை யல் கலை போன்ற படிப்புகளைப் படிப்பவர்கள் உயர்வேலை வாய்ப்பு களை பெறுகின்றார்கள். அதிக வேலைவாய்ப்பு கொடுக் கக்கூடிய துறையாக இருந்தபோதும் மாணவர்கள் முறையான கல்விநி றுவனங்களை தேர்வு செய்து படிக்க வேண்டியது அவசியம்.தேசிய ஹோட் டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப கவுன்சிலில் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளின் விபரங்கள் அதன் இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் விவரங்களை தெரிந்து கொண்டு மாணவர்கள் அத்தகைய கல்லூரிகளை தேர்ந் தெடுத்து படிக்கலாம்.

மூன்றாண்டு பட்டப்படிப்புகள் என்.சி.எச்.எம். சி.டி(NCHMCT) மூலம் அகில இந் திய அளவில் நடத்தப்படும் நுழை வுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அன்ட் அப் ளைடு நியூட்ரிஷன், சென்னை,மற்றும் ஸ்டேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட் டல் மேனேஜ்மென்ட் அன்ட் கேட்டரிங் டெக்னாலஜி, துவாக்குடி, திருச்சி. இவைதவிர ஏராளமான தனியார்கல்லூரிகளில் ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்புகளை படிக்கலாம்.

ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூ ரிகள் நிறைய செயல்படுவதால் எதில் சேருவது என்ற குழப்பம் மாணவர்க ளிடம் பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் சேரவிரும்பும் கல்வி நிறுவனமானது அடிப்படை வசதிக ளைக் கொண்டதாகவும், தகுதியான ஆசிரியர்களைக் கொண்டதாகவும் இருப்பது அவசியம். எந்த கல்லூரியில் சிறப்பான தகவல் தொடர்புத் திறன் களும், அடிப்படை விருந்தோம்பல் திறன்களும், நல்ல ஆங்கிலத் திற னும் சேர்த்தே கற்றுத்தந்து வேலை வாய்ப்பை உருவாக்கி தரக்கூடிய கல்லூரியாக இருத்தல் வேண்டும். அத்தகைய கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தாராளமாக சேரலாம். சர்வதேச ஹோட்டல்கள், ரிசார்ட் டுகள் மற்றும் உணவு நிர்வாகப் பணி, நட்சத்திர விடுதிகளில் செஃப், கேட்டரிங் மேனேஜர், ஹோட்டல் ஆபரேஷன்ஸ் மேனேஜர், கெஸ்ட் ரிலேஷன் எக்ஸிகியூட்டிவ், ஃப்ரன்ட் ஆபிஸ் எக்ஸிகியூட்டிவ், எக்ஸிகியூட் டிவ்ஹவுஸ் கீப்பர், ஈவன்ட் மேனேஜர், பொழுதுபோக்கு பூங்காக்களில் பணி வாய்ப்பு, உணவு ஊடகவியலாளர், உணவு புகைப்படக்காரர்களுக்கான வாய்ப்புகள், விமானங்கள், ரயில்வே, பயணிகள் மற்றும் சரக்குக்கப்பல்கள், மருத்துவமனை மற்றும் தொழில் துறை கேட்டரிங் பிரிவுகளிலும் ஏராள மான வேலை வாய்ப்புகள் உள்ளது.

இது தவிர ஐ.டி. துறை. வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும், சொந்தமாக தொழில் தொடங்கியும் இந்தத் துறையில் சாதிக்கலாம்.

-பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர். கல்வியாளர்,
IMG_20230706_113636

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews