'மார்க் சீட்' வேணும்னா 500 கொடு... தலைமை ஆசிரியர் அடாவடி லஞ்சம்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 04, 2023

Comments:0

'மார்க் சீட்' வேணும்னா 500 கொடு... தலைமை ஆசிரியர் அடாவடி லஞ்சம்...

'ஒரு மண்ணாங்கட்டியும் படிக்க வேண்டாம்'

'மார்க் சீட்' வேணும்னா 500 கொடு... தலைமை ஆசிரியர் அடாவடி லஞ்சம்

பேப்பர் பண்டல் வாங்கி தர்றீயா...

மார்க்க குறைக்கவா... என ஆசிரியை மிரட்டல்

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் திருச்சி அருகே அரசு பள்ளியில் 'மார்க் சீட்' கேட்க வந்த மாணவர்க ளிடம் 2500, பேப்பர் பண்டல் கேட்டு தலைமை ஆசிரியர், ஆசி ரியை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாவட்டம் கோவில் பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் 4 பேர், அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் (ஐடிஐ) சேர்வதற்கு மாற்று சான் றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தேவை என்பதால் அதை வாங்குவதற்கு பள்ளிக்கு சென்றுள்ளனர். இவர் கள் அனைவரும், கடந்த 2019- 20ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்துள்ளனர்.

அப்போது கொரோனா காலம் என்பதால் அனைவரும் தேர்ச்சி என கல்வித்துறை அறிவித்து சான்றிதழ் வழங்கி இருந்தது. ஆனால் இதுபோன்ற மேல்கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு அவர்கள் முந் தைய தேர்வில் பெற்ற சராசரி மதிப்பெண் அடிப்படையில் பள்ளி நிர்வாகமே மதிப்பெண் சான்றிதழ் வழங்கி வருகிறது.

இந்த மதிப்பெண் சான்றி தழை பெறுவதற்காக சம்பந் தப்பட்ட 4 மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீதரை அணுகியுள்ளனர்.

அப்போது பள்ளி தலைமை ஆசிரியர், 'மாணவர்களிடம் மதிப்பெண் சான்று வழங்க தலா T500 வழங்க வேண்டும். இல்லை யென்றால் ஒவ்வொருவரும் 44 பேப்பர் பண்டல் ரெண்டு வாங்கி கொடு' என்று கூறியுள்ளார். அப்போது அந்த மாண வர்கள் கையில் பணம் இல் லாததால் ஒரே ஒரு பண்டலை மட்டும் வாங்கி வந்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்கும்போது அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் வாய்க்கு வந்தபடி திட் டுகிறார். 'இந்த நான்கு எருமை மாடுகளை வெளியே விரட்டி விடுங்கள். . இவர்கள் ஐடிஐயும் படிக்க வேண்டாம். ஒரு மண் ணாங்கட்டியும் படிக்க வேண் டாம்' என்று மாணவர்களை வசைபாடினார்.

அப்போது அருகில் இருந்த ஆசிரியையிடம், 'காசு இல்லை டீச்சர். அதன் ஒன்று வாங்கி வந்தோம்' என்று மாணவர்கள் கெஞ்சு கின்றனர். ஆனால் அதற்கு அந்த ஆசிரியை, 'காசு இல் லையனா 10, 12, 13 மார்க் என்று போட்டு தரட்டுமா' என கேட்கி றார். இவர்களுக்கு இதுபோதும் என மீண்டும் தலைமை ஆசிரி யர் சொல்வதோடு, 'போங்கடா போங்க' என மாணவர்களை விரட்டுவதும், மாணவர்கள் காசு இல்லை என கெஞ்சுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்க ளில் வைரலாக பரவி வருகி றது. தங்களது பிள்ளைகளை பல்வேறு கஷ்டத்திலும் பெற் றோர்கள் படிக்க வைத்து வரும் நிலையில், அடாவடி லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியு திறுத்தி உள்ளனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews