12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத ஹால் டிக்கெட் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 11, 2023

Comments:0

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத ஹால் டிக்கெட் வெளியீடு!

IMG_20230611_221108_013
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத ஹால் டிக்கெட் வெளியீடு!

மேல்நிலை வகுப்புக்கான துணைத்தேர்வு!

கடந்த கல்வியாண்டில் நடத்தப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கான மறுத்தேர்வு ஜூன் 19ம் தேதி துவங்கி ஜூலை 5 வரை உள்ள தேதிகளில் நடைபெற உள்ளது.

செய்முறை துணைத்தேர்வு!

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் வருகின்ற 14ம் தேதி முதல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளம் https://www.dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84697672