பிங்க் வாட்ஸ் அப் லிங்கை தொட வேண்டாம்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 14, 2023

Comments:0

பிங்க் வாட்ஸ் அப் லிங்கை தொட வேண்டாம்: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை..

Don't Touch Pink WhatsApp Link: Cybercrime Police Alert.. - பிங்க் வாட்ஸ் அப் லிங்கை தொட வேண்டாம்: இணையதளத்தை முடக்குபவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை..!!

இணையதளத்தை முடக்குபவர்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப்பில் உள்ள குழுக்கள் மூலம் தற்போது நமது தனிபட்ட தகவல்களையும், வங்கி கணக்குகளையும் திருடி நமது பணத்தை ஹேக்கர்கள் அபகரித்து விடுகின்றனர். வாட்ஸ்அப் குழுக்களில் செல்போனில் வாட்ஸ்அப் பிங்க் எனும் பெயரில் பச்சை நிறத்தை இளஞ்சிவப்பு நிறமாக மாற்றுவதாக கூறும் லிங்க் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இணையதளத்தை முடக்குபவர்கள் குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில், டாடா மோட்டார்ஸ் 15ம் ஆண்டு என்று வருகின்ற லிங்கை தொட வேண்டாம் என கூறியுள்ளது. பிங்க் வாட்ஸ் அப் லிங்கை தொட வேண்டாம்; அந்த லிங்கை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். லிங்கை கிளிக் செய்தால் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வாட்ஸ் அப் தகவல்கள் அனைத்தும் திருடப்படும். தகவல்கள் திருடப்பட்டு செல்போன் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்கு சென்று விடும். இது மட்டுமல்லாமல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், தொலைபேசி எண்கள் உள்பட பல தகவல்கள் திருடப்படுகின்றன.

மேலும் பிங்க் வாட்ஸ் அப் அல்லது தேவையில்லாத நபர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது. எந்த செயலியையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தான் டவுன்லோடு செய்ய வேண்டும். வேறு எந்த இணைப்பிலும் டவுன்லோடு செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் ஆபத்தான வைரஸ் இதுவாகும். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews