பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள்: வடிவமைப்பை மாற்ற கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 24, 2023

Comments:0

பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள்: வடிவமைப்பை மாற்ற கோரிக்கை



பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள்: வடிவமைப்பை மாற்ற கோரிக்கை Class 10th Science Question Paper: Format Change Request

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், அறிவியல் வினாத் தாள் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. kaninikkalvi.blogspot.com

இது தொடர்பாக அந்த கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய் மாண்ட், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்ககத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:

பத்தாம் வகுப்புக்கு புதிய பாடத்திட் டம், 2019 - 2020-இல் அறிமுகமானது. அப்போது, அனைத்து பாடங்க ளுக்கும், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு உள்ளது. அறிவியல்பா டத்தின் வினாத்தாள் வடிவமைப்பால், மாணவர்களின் தேர்ச்சி வீதம் பெரி தும் குறைந்து வருகிறது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, 'தியரி'யில் குறைந்தபட்சம் 20 மதிப் பெண்பெற்றால்தான் தேர்ச்சி என்ற முறையை நீக்க வேண்டும். 2 மதிப் பெண்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, 7 மதிப்பெண்வினாக்கள் அறி முகம் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒரு கேள்வியை தவற விட்டாலும், மாணவர்களுக்கு,7 மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது. kaninikkalvi.blogspot.com

எனவே, 2 மதிப்பெண்கள் கேள்வியை அதிகரித்து,7 மதிப்பெண்களுக்கு பதிலாக, 5 மதிப்பெண்கள் வினாக்களை இடம் பெறச் செய்ய வேண்டும். பழைய வினாத்தாள் வடிவமைப்பு இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியல் வினாத்தாளில், அனைத்து பிரிவு வினாக்களிலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு சம எண்ணிக்கையிலான மதிப்பெண் கள் வழங்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும்.

மெல்ல கற்கும் மாணவர்கள், சராசரியாக பயிலும் மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் என அனைவரையும் உள்ள டக்கி, வினாத்தாள் தயாரிக்க வேண்டும். இந்த மாற்றங்களை இந்தக் கல்வி யாண்டேஅமல்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews