அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம்!
பெற்றோர்கள் தங்களது குழந்தையை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கும் போது போகும் அழகைக் கண்டு ரசிக்காத பெற்றோர்களே இல்லை. இருப்பினும் தனது பொருளாதார வருமானத்தையும் மீறி பல தனி யார் கல்வி நிறுவனங்களின் விளம்ப ரங்களைப் பார்த்து அதில் சேர்ப்ப தற்கு போட்டி போட்டுக்கொண்டு தங்கள் சம்பாதித்த பணத்தை எல் லாம் கொட்டித் தீர்க்கின்றனர்.ஆனால் இதனை எல்லாம் முறியடிக்கும் வித மாக தரமான கல்வியை அரசுப் பள்ளி அளிக்கிறது. கட்டணமில்லா கல்வி
அரசுப் பள்ளிகளில் 2023 2024ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கி நடந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரை அரசுப் கிறது. பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியில் 20% முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆறாம் வகுப்பு முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாண வர்களுக்கு உயர் கல்வி (மருத்து வம், பொறியியல், வேளாண்மை, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம், கலை & அறிவியல் உள்ளிட்ட படிப்புகள்) பயில 7.5 % முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவியர்க்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ.1,000 வீதம் படிப்பு முடியும் வரை வழங்கப்படும்.
6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இலவச கராத்தே பயிற்சி.
மிகவும் பிற்படுத்தப்பட்ட மாண விகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது
நலிவடைந்த பிரிவைச்சேர்ந்த மாணவிகளுக்கு மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.500, ஆறாம் வகுப்பிற்கு ரூ.1,000, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ. 1,500 வழங்கப்படுகிறது. மூன்று பருவங்களுக்கும் விலை யில்லா புத்தகங்கள், விலையில்லா குறிப்பேடுகள், விலையில்லா சீருடைகள்- 4 செட்விலையில்லா புத்தகப்பை, விலையில்லா கால ணிகள்,வண்ண பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி.புவியி யல் வரைபட நூல், தினந்தோறும் முட்டையுடன் சத்துணவு,இலவச பேருந்து பயண அட்டை ஆகி யவை வழங்கப்படுகின்றன.
போட்டிகளில் வெற்றி பெறும் அரசுப்பள்ளி மாணவ மாணவி யர் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படு கின்றனர்.
அரசுப்பள்ளி மாணவ-மாணவி யர் வாசிப்பு திறன் வளர்க்க தேன் சிட்டு மாத இதழ், விலையில்லா மிதி வண்டி, விலையில்லா மடிக் கணினி,இன்னும் நன்மைகள் ஏராளம் ஏராளம்.
அரசுப்பள்ளி வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளமாகவே திகழ்கின்றன.
* குடந்தை சரவணன்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.