அடுக்கடுக்கான பணிச்சுமைகள்! அவதிப்படும் ஆசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 24, 2023

Comments:0

அடுக்கடுக்கான பணிச்சுமைகள்! அவதிப்படும் ஆசிரியர்கள்!

அடுக்கடுக்கான பணிச்சுமைகள்! அவதிப்படும் ஆசிரியர்கள்!

தினமணி மாணவர் மலர் 2023 புத்தகத்தில் ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மண்ட் அவர்களின் கட்டுரை

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூடுதல் பணிகள்

1. தேர்தல் பணிகள்,

2.மக்கள்தொகை கணக்கெடுப்பு,

3.கல்வித் தகவல் மேலாண்மை முறைமை செயலியில் (எமிஸ்) தகவல்கள் பதிவேற்றம்,

4. சானிட்டரி நாப்கின் வழங்குதல்,

5.சத்துணவு விநியோகம் கண்காணிப்பு, 6.மருத்துவ முகாம்கள்,

7. ஏராளமான பதிவேடுகளைப் பராமரித்தல்,

8.அடிக்கடி புள்ளிவிவரங்களை பதிவு செய்ய வற்புறுத்துவது,

9.14 வகையான இலவசப் பொருள்களை எடுத்து வர அனுப்புதல்,

10. இடைநின்ற மாணவர்களை மீண்டும் சேர்ப்பதற்கான பணி. பொளாதாரத்தில் பின் தங்கி, குடும்ப சிக்கல்களைக் கடந்து பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பள்ளி நோக்கி வரும் மாணவர்களை நல்வழிப்படுத்தும் அற்புதத்தை நிகழ்த்துவதில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நிகராக யாருமில்லை.

கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களையும் சிறப்பாகக் கையாண்டு அவர்களின் திறமை வெளிப்படச் செய்வதிலும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் கைதேர்ந்தவர்கள். இத்தகைய சிறப்பு மிக்க ஆசிரியர்கள் பணி ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து யாரும் பொதுவெளியில் பேசுவதில்லை.. பள்ளி ஆசிரியர்களை கற்பித்தலுக்குத் தொடர்பில்லாத பணிகளில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். ஆசிரியர்களின் பணிச்சுமைகள் தீக்சுப்படும்போது மாநிலத்தின் கல்வித் தரம் உயரும் என்கிறார் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட். அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட சிவ விஷயங்களைப் பார்ப்போம்....

தமிழகத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் . ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் இன்று அதிகபணிச்சுமையால் தவிக்கின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் உடனடியாகத் தீர்க்கப் பட வேண்டிய பிரச்னைகளை மட்டும் முன்வைக்க விரும்புகிறேன்.

மே மாதத்தில் மட்டும் கலந்தாய்வு

ஆசிரியர்களுக்கு பயனற்ற பயிற்சிகளை இணையவழியில் வழங்குவதைத் தவிர்த்து மேம்பட்ட பயிற்சிகளை மட்டும் வழங்க வேண்டும். குறிப்பாக பள்ளி வேலைநாளில் பயிற்சி வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்குவது கற்பித்தலில் இடையூறை ஏற்படுத்தும்.

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை ஆண்டுதோறும் நடத்தி ஆசிரியர்களை அலைக்கழிப்பதைத் தவிர்த்து, மே மாதத்தில் மட்டும் நடத்தி முடிக்க வேண்டும். கலந்தாய்வில் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

கடைசியாக ஒரு கோரிக்கை

ஆண்டுதோறும் செப். 5-ஆம் தேதி மட்டும் ஆசிரியர்களை வானளாவ புகழ்ந்துவிட்டு மற்ற நாள்களில் வசை பாட வேண்டாம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெறக்கூடிய ஊதியத்தைக் காட்டிலும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் பல மடங்கு அதிகம். அதை பெற்றோர் உணர்ந்து ஆசிரியர்கள்ளுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பை வழங்கினால் மாணவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல ஆசிரியர்களின் தன்னம்பிக்கையும் மேம்படும் என்றார் பேட்ரிக் ரெய்மாண்ட்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews