பள்ளி, கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கணக்கெடுக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 26, 2023

Comments:0

பள்ளி, கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கணக்கெடுக்க உத்தரவு

பள்ளி, கல்லூரி அருகே உள்ள டாஸ்மாக் கணக்கெடுக்க உத்தரவு Order for Tasmac survey near schools and colleges

Order%20for%20Tasmac%20survey%20near%20schools%20and%20colleges


பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் - கணக்கெடுப்பு

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

ஏற்கனவே நகராட்சி, மாநகராட்சிகளில் 50 மீட்டர் என இருந்த தூரத்தை 100 மீட்டராக உயர்த்த கூட்டத்தில் முடிவு

பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் கணக்கெடுப்பு - அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
Order%20for%20Tasmac%20survey%20near%20schools%20and%20college


பள்ளி, கல்லூரிகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தினார். சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வாணிப கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுகூட்டம் மேற்கொண்டார். அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அமைச்சார் வெளியிட்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் அறிவுறுத்தினார். மேலும் நகராட்சி, மாநகராட்சிகளில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு 50 மீட்டர் என இருந்த தூரத்தை 100 மீட்டராக உயர்த்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84611825