போக்சோ வழக்குகளில் கைது பற்றி காவல் துறை தலைமையக சுற்றறிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 03, 2023

Comments:0

போக்சோ வழக்குகளில் கைது பற்றி காவல் துறை தலைமையக சுற்றறிக்கை!

Police-headquarters-circular-about-arrests-in-POCSO-cases
போக்சோ வழக்குகளில் கைது பற்றிய காவல் துறை தலைமையகம் சுற்றறிக்கை

போக்சோ வழக்குகளில் கைது பற்றிய சுற்றறிக்கை.

பார்வை: RcN0,009464/ Crime-4(3)/2022 நாள்: 20:04:2021

மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை (குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்) ஆய்வு செய்து போக்சோ வழக்கு எதிரிகள் கைது பற்றி கிழ்கண்ட அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

அதன்படி கிழ்காணும் அறிவுரைகள் காவல் நிலைய குற்ற புலன் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

i) திருமண உறவு. காதல் உறவு போன்ற தன்மை கொண்ட போக்சோ வழக்கீளில்

அவசரப்பட்டு எதிரி மீது கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது.

ii) அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41(4) ன் படி எதிரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்யலாம்.

iii) குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யவில்லை என்றால் அதன் விவரம், அதற்கான காரணங்கள் வழக்கு கோப்பில் பதிவு செய்யப்படவேண்டும். iv) குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுத்தேதீரவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின் பேரில் மட்டுமே எதிரிகள் கைது செய்யப்படவேண்டும்.

w) முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை) உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து அதன் பின்னர் உரிய அறிவுரைகள் அவர்களுக்கு வழங்கவேண்டும்.

இவ்வறிவுரைகள் முழுமையாக பின்பற்றபடுவதை மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கண்டிப்பாக கண்காணிக்க அறிவுறுத்தபடுகின்றனர்.

இச்சுற்றறிக்கை அனைத்து காவல் நிலைய உயர் அதிகாரிகள் ஆய்வு பதிவேட்டில் சேர்க்கபடவேண்டும்.

IMG_20230503_144130

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews