வளமான வாய்ப்புகளுக்கு டிப்ளமா படிப்பு! Diploma course for rich opportunities!
வழக்கமான கல்லூரி பாடங்களுடன் ஒப்பிடுகையில், டிப்ளமா படிப்புகள் சுலபமாகவும், குறைந்த கட்டணத்தை கொண்டுள்ளதாகவும் மாணவர்கள் மற்றும் பெற்றோரால் கருதப்படுகின்றன.
அத்தகைய பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொதுவாக, பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற பயன்பாட்டு அறிவியல்களில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பெரும்பாலும், தொழில்நுட்பக் கல்வியின் மாநில வாரியங்கள் அல்லது பிற நிர்வாக அமைப்புகளுடன் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டிருக்கும். பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளின் காலம் பொதுவாக 3 முதல் 4 ஆண்டுகள் வரை உள்ளது.
இவைதவிர, பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பயிற்சி நிறுவனங்கள் பல்வேறு பிரிவுகளில் குறுகியகால டிப்ளமா படிப்புகளை வழங்குகின்றன. முக்கிய அம்சங்கள்
* பாலிடெக்னிக் பாடத்திட்டங்கள் பயிற்சி, நடைமுறை திறன்கள் மற்றும் தொழில் தொடர்பான அறிவு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் தேர்ச்சி பெற விரிவான ஆய்வக மற்றும் பயிற்சியை பெறுகின்றனர்.
* பாலிடெக்னிக் நிறுவனங்கள் பெரும்பாலும் தொழில்துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகளை வழங்குகின்றன.
இது மாணவர்கள் நிஜ உலக திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகிறது மற்றும் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துகிறது.
மேலும், மாணவர்கள் தங்கள் தொழில் இலக்குகளுடன் கூடிய சிறப்பு திறன்களை உருவாக்கிக்கொள்ளவும் வழிவகுக்கிறது.
* பாலிடெக்னிக் படிப்புகள் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், உணவு தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
* டிப்ளமா படித்தவர்கள் பிற மாணவர்களை விட, பொறியியல் படிப்பை எளிதாக கற்கின்றனர். ஏனெனில், பெரும்பாலும் டிப்ளமா மற்றும் இன்ஜினியரிங் படிப்புகள் ஒரே மாதிரியானவை. இரண்டிலும், தியரியை விட செயல்முறை பயிற்சி அதிகளவில் இடம் பெற்றிருக்கும். லேட்ரல் என்ட்ரி
பாலிடெக்னிக் டிப்ளமா படித்தவர்கள், லேட்டரல் என்ட்ரி முறையில் பொறியியல் அல்லது அது தொடர்பான பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டு அல்லது மூன்றாம் செமஸ்டரில் சேர வாய்ப்பு உள்ளது.
இதன் வாயிலாக, அவர்களால் உயர் தகுதியைப் பெறவும், தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் முடியும்.
மேலும், பல்வேறு கலை, அறிவியல், தொழில்நுட்ப பிரிவுகளில் குறுகியகால டிப்ளமா படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தொழில்துறையின் தேவையை பூர்த்தி செய்வதோடு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் தேவைப்படும் திறனாளர்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆகவே, பாலிடெக்னிக் கல்வி, மாணவர்கள் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதற்கும், வேலை வாய்ப்பை பெறுவதற்கும் வழிவகுக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.