lock private conversations on WhatsApp - WhatsAppல் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 03, 2023

Comments:0

lock private conversations on WhatsApp - WhatsAppல் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி!



A user can lock their private chat using group info or a chat's contact. Once the chat has been locked it will be added to a list of locked chats. This list will appear separately in the app. The chat will then only be accessible using the user's passcode or fingerprint

WhatsAppல் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி! The facility to lock private conversations on WhatsApp!

வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டிவைத்துக்கொள்ளும் வசதி!

வாட்ஸ்அப் பயனர்கள் குறிப்பிட்ட சில தனிப்பட்ட உரையாடல்களைப் பூட்டி வைத்துக்கொள்ளும் (Lock) செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சேட் கான்டாக்ட்’ அல்லது ‘குரூப் இன்ஃபோ’வைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்களது தனிப்பட்ட உரையாடல்களை ‘லாக்’ செய்துகொள்ளலாம். வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிடும் WAbetainfo இணையத்தளத்தில் இந்தத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அப்படி ‘பூட்டு’ போடப்பட்ட உரையாடல்கள் அனைத்தும் ‘லாக்டு சேட்’ பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடும். வாட்ஸ்அப்பில் அப்பட்டியல் தனியாகத் தோன்றும்.

‘பூட்டு’ போடப்பட்ட உரையாடல்களைப் பயனர் தமது விரல்ரேகை அல்லது கடவு எண் (passcode) கொண்டு மட்டுமே பார்க்கலாம். மற்றவர்கள் பார்க்க முடியாது.

ஒருவரின் கைப்பேசியை இன்னொருவர் இரவலாகப் பெறலாம். அப்போது, அவர் அக்கைப்பேசியில் உள்ள வாட்ஸ்அப்பைத் திறந்து அதற்குரியவரின் உரையாடல்களைப் பார்க்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், ‘லாக் சேட்’ வசதியால் இனி அத்தொல்லை இருக்காது எனச் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews