ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்கள்: பட்டியல் அனுப்ப கல்வித் துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 12, 2023

Comments:0

ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்கள்: பட்டியல் அனுப்ப கல்வித் துறை உத்தரவு

IMG_20230412_164511


ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்கள்: பட்டியல் அனுப்ப கல்வித் துறை உத்தரவு

சென்னை, ஏப். 11: பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியரல்லாத காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையில் உதவியாளர், இளநிலை உதவியா ளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நேரடி நியமன அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.

இதையடுத்து, இந்த பணிகளில் 15.3.2024 வரை பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய காலியிடங்களின் விவரங்களை மாவட்டக் கல்வி அதிகாரிகள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அவற்றைமாவட்டமுதன்மைகல்வி அலுவலர்கள்தொகுத்து அறிக்கையாக ஆணையரகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631367