தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 17, 2023

Comments:0

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்

Admission of students from 1st to 9th class in Tamilnadu government schools has started - தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடக்கம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை, இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை இன்று முதல் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக 1 கோடி பேர் படித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பொதுத் தேர்வு எழுதி வெளியில் செல்வோர் எண்ணிக்கை 20 லட்சம் அளவுக்கு இருக்கும்.

இந்நிலையில் தனியார் பள்ளிகளில் உள்ள சில வசதிகளை விரும்பும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விருப்பம் காட்டி வருகின்றனர். ஆனால், கடந்த கொரோனா காலத்துக்கு பிறகு அதிக அளவிலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவே அதிக ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதன்படி கடந்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து, 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள் கீழ் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கல்வி ஆண்டான 2023-2024ல் மாணவர்களை சேர்ப்பதற்கான பணியில் பள்ளிக் கல்வித்துறை தற்போது இறங்கியுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணியை இன்று தொடங்கி 28ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேலும், இந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிக்காக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் விளம்பர வாகனம் ஒன்றும் பேரணியில் வலம்வர உள்ளது.

அதில் அரசின் திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்கள், என பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன. பேரணியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் அந்தந்த பகுதிகளில் உள்ள அருகமை பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் பெயர்களை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் பள்ளிகளுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews