2ம் வகுப்பு வரை தேர்வு கூடாது - தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 08, 2023

Comments:0

2ம் வகுப்பு வரை தேர்வு கூடாது - தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு

images%20%282%29
2ம் வகுப்பு வரை தேர்வு கூடாது

புதுடில்லி-'பள்ளி குழந்தைகளுக்கு மூன்றாம் வகுப்பில் இருந்து தான் தேர்வுகள் நடத்த வேண்டும்; இரண்டாம் வகுப்பு வரை தேர்வு நடத்துவது பொருத்தமற்றது' என, தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு இது வரை நான்கு முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக திருத்தி அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

கடந்த 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப, பாடத்திட்டத்தை திருத்தி அமைக்கும் பணியில் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்துாரி ரங்கன் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான தேர்வு நடைமுறை குறித்து இந்த குழு வெளியிட்டுள்ள திட்ட முன்வரைவு:

தேர்வு மதிப்பீட்டு முறை, குழந்தைகளின் கற்றல் திறனில் பன்முகத்தன்மையை அனுமதிக்க வேண்டும். குழந்தைகள் வித்தியாசமாக கற்றுக் கொள்கின்றனர். அதை வித்தியாசமாக வெளிப்படுத்துகின்றனர்.

அவர்களுடைய கற்றல் திறமையை பரிசோதிக்க பல்வேறு வழிகள் இருக்கலாம். ஆனால், ஒரே கற்றல் முறையில் பல்வேறு விதமான மதிப்பீட்டு முறையை வடிவமைக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். அந்த மதிப்பீட்டு முறை, குழந்தைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது. அதை, கற்றல் நடைமுறையின் நீட்டிக்கப்பட்ட அங்கமாக குழந்தைகள் உணர வேண்டும்.

குழந்தைகள் 3 - 5ம் வகுப்பு படிக்கும் போது தான் எழுத்து வாயிலான தேர்வுகளை அறிமுகப்படுத்த வேண்டும். இரண்டாம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்துவது பொருத்தமற்றது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி கல்விக்கான இந்த முன்வரைவு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616575