பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 24, 2023

Comments:0

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள், இனி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு / பணி மாறுதல் பெற முடியாது - நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக இனிமேல் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்கள் வரவே முடியாது என்றும், பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே வரமுடியும் என்றும் வந்துள்ள நீதிமன்றத் தீர்ப்பினால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை?

பட்டதாரி ஆசிரியராக இருக்கும் ஒருவர் தம்முடைய பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு முதுகலை ஆசிரியர்/ உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் என்ற இரண்டு பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். (உரிய தகுதியைப் பொறுத்து)

முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றவுடன் அந்தத் தேதியை அடிப்படையாகக் கொண்டு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறுகிறார். @kaninikkalvi

பட்டதாரி ஆசிரியர் பணிக்காலத்திற்காக அவருக்குக் கிடைத்தது முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு.

ஆனால் இவ்வளவு நாள்களாக விதிகளைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் அவர் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற பிறகும் கூட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்று இருந்தார். அவ்வாறு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும் வந்தார். ஆனால் அவ்வாறு வருவது அவருக்கு பதவி உயர்வு அல்ல. பணிமாறுதல் மட்டுமே. ஏனெனில் முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இரண்டும் சமமான ஊதிய அமைப்பைக் கொண்டவை. பட்டதாரி ஆசிரியராக இருந்து அந்தப் பணிக்காலத்தை வைத்து முதுகலை ஆசிரியராகச் சென்றவர் ஒரே நேரத்தில் அங்கு பணியாற்றும் முதுகலை ஆசிரியர் பணிக்காலத்தை வைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலிலும் இடம் பெறுகிறார். இங்கு பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றாத காலத்தையும் கணக்கில் கொண்டு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிமாறுதலுக்கும் வருகிறார் என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.

அதனால் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக வரக்கூடாது என்ற தீர்ப்பினால் அவர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லை; அதே போல் அவர்களுக்கு உரிமையானது எதையும் இழக்கவில்லை.

இதற்கு முன்னர் ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில் 500 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற்றார்கள். 300 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் வெறும் 50 பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பயன்பெற்றார்கள். அதில் 250 பேர் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களாக இருந்து பணிமாறுதலில் வந்துவிட்டனர்.

இனிமேல் என்ன ஆகும்? @kaninikkalvi ஆண்டுக்கு 500 முதுகலை ஆசிரியர்களாகவும், 300 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆகமொத்தம் 800 பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெறுவர். தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு போன்ற பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மொத்தப் பணிக்காலத்திலும் ஒரு பதவி உயர்வைக் கூட காணாமல் பணிநிறைவு அடைந்த நிலை இனிமேல் வராது.

அவ்வகையில் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு எவ்வித பண இழப்பும் இல்லாமல் அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தங்கள் பணிக்காலத்தில் ஒரு பதவி உயர்வு பெற்று ஊதிய உயர்வினைப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நல்ல நிலையை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த இயக்கம் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் என்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உண்மை நிலை என்னவென்பதை அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews